கோவை உக்கடம் பெரியகுளம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் உக்கடம் பெரியகுளம்-கரும்புக்கடை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை ஜூலை 11 அன்று நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (ஜூலை 11) உக்கடம் பெரியகுளத்தில் இருந்து கரும்புக்கடை வழியாக செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண் 86-க்குட்பட்ட பகுதியில் உள்ள இந்த பாசன வாய்க்காலின் நிலையை ஆணையர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, வாய்க்காலை தூர்வாரும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொது) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமது கபீர், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் பல மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...