தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டமேற்படிப்பு சேர்க்கை ரத்து

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டமேற்படிப்பு சேர்க்கையை ரத்து செய்துள்ளது. மாணவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டமேற்படிப்பு சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு மாணவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டமேற்படிப்புப் பயிலகம் 11 உறுப்புக் கல்லூரிகள் மூலம் 33 துறைகளில் முதுநிலைப் படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான சேர்க்கைக்கு மே 8, 2024 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூன் 23, 2024 அன்று நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நுழைவுத் தேர்வுக்கு பல்வேறு மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலிருந்து 2,881 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலான மாணவர்கள் தங்களது இளநிலை பட்டப்படிப்பை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிக்க இயலும் என்றும், அதனால் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கால தாமதமாக இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களை தவிர்க்கும் விதமாக, நடப்பு ஆண்டில் மே மாதம் துவங்கப்பட்ட முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவர் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...