கோவை ரேஸ்கோர்ஸில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை ரேஸ்கோர்ஸில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேரணியை தொடங்கி வைத்தார். செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஜூலை 10 அன்று தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



இந்த விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த கருவள விகிதம் 3.1 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் குறிக்கோளான மக்கள் தொகையை நிலைப்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள் "ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம், அதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்பதாகும். மேலும், தாய், சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும், போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...