கோவையில் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்த கவுன்சிலர்

கோவை மாநகராட்சியின் 86வது வார்டில், கவுன்சிலர் அகமது கபீர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 86வது வார்டு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து கவுன்சிலர் அகமது கபீர் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உக்கடம் குழந்தை கவுண்டர் வீதி பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால், தொடர்ந்து குப்பைகள் அதிகமாக சேர்ந்து சாக்கடை நிரம்பி வழிகிறது. மழைக்காலத்தில் இது பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், வாய்க்காலை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.



அப்போது, அப்பகுதி கவுன்சிலரும் மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்தவருமான அகமது கபீர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து நீர் வழிப்பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இச்செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

"பொதுமக்கள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ராஜவாய்க்காலில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டியில் கொட்ட வேண்டும்," என்று கவுன்சிலர் அகமது கபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மற்ற பிரதிநிதிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...