அதிமுக-வின் இரு அணிகளும் ஒன்றுசேர முயற்சி மேற்கொள்வதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும்- கோவையில் ஆனந்தராஜ் பேட்டி


அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என அதிமுக முன்னாள் நட்சத்திர பேச்சாளரும், நடிகருமான ஆனந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாள்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே ஒரு தொகுதிக்கு 100 கோடி செலவு செய்துள்ளனர்.  தினகரன் தவிர வேறு யாராவது நின்று இருந்தால் இந்த அளவு செலவு செய்திருப்பார்களா ?.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பேட்டி மூலமே வெளிப்படுகிறது. கொங்குமண்டலம் அதிமுக-விற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மக்கள் வருத்தத்தினை போக்க நல்ல முடிவினை எடுக்க வேண்டும். அதிமுக ஒரு குடும்ப கட்சியாக இருக்கக் கூடாது.

எந்த அணியிலும் இதுவரை தான் இல்லை. நடிகனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் மட்டுமே உள்ளேன். தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும்.

இந்த ஆட்சியை மக்களிடம் கொடுத்து விட வேண்டும். ஆட்சியை கலைத்துவிட்டு யாரை வேண்டுமானாலும் மக்கள் தேர்வு செய்யட்டும். மாற்றம் வருவதற்கான சூழல்கள் தெரிகிறது.

இயக்குனர் கௌதமன் சென்னை கத்திபாரா பாலத்தில் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது போன்ற போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாகவே இருக்கும். 

தமிழகத்தில் ஆட்சி நடக்கின்றதா என்பதே யாருக்கும் தெரியவில்லை. செயல்படாத முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக அம்மா அணியில் நட்சத்திர பேச்சாளர்கள் இருக்க விரும்பவில்லை. அதனாலேயே நடிகை விஜயசாந்தி, நடிகர் சரத்குமார் போன்றவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்" என ஆனந்தராஜ் பேசினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...