எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா – துடியலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை நிர்வாகிகள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


கோவை: கோவை துடியலூரில் SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் துவக்க தின கல்வெட்டையும் திறந்து வைத்தனர். SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி தலைவர் யாசர் அரபாத் தலைமை ஏற்க, தொகுதி செயலாளர் கமருதீன் முன்னிலை வகுக்க, தொகுதியின் அமைப்புச் செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் சக நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடி ஏற்றினர்.



தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பசியற்ற, பயமற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும், மதவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்னும் சூழல் இந்திய தேசத்தில் நிலவ வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...