கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம்

கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.


கோவை: கடந்த நிதியாண்டு வரை இந்தியாவில் 38.50 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதில் 95% வாகனங்கள் 2 சக்கர மின்சார வாகனங்கள், 1.67 லட்சம் வாகனங்கள் 4 சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 7,700 வாகனங்கள் மின்சார பேருந்துகள், இந்தியாவில் விற்கப்படும் சுமார் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்களும், சுமார் 70% 2 சக்கர மின்சார வாகனங்களும் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டவை.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. கோவை மாநகரில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைத்திட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் டாடா பவர் கம்பெனி லிட், மும்பை (TATA POWER FAST CHARGING STATION) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தற்போது கோவை வ.உ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80% சார்ஜ் வரை செய்ய முடியும்.

இதையும் சேர்த்து மொத்தம் அமையவுள்ள 20 சார்ஜிங் நிலையங்களில் 3 ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைகிறது. அவிநாசி சாலை, வ.உ.சி. பூங்கா பகுதி, வாலாங்குளம் மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 சார்ஜிங் நிலையங்களும், சரவணம்பட்டி, புரூக்பீல்டு அருகே அமைந்துள்ள மாநகராட்சி பார்க்கிங் பகுதி, சிங்காநல்லூர், டைட்டில் பார்க், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியகுளம், துடியலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 சார்ஜிங் நிலையமும் அமைகிறது.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...