கள்ளக்குறிச்சி சம்பவம்: திமுக அரசு மீது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடும் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும், மதுவிலக்கு அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.


கோவை: மத்திய இணை அமைச்சர் ஆன பின்பு முதல்முறையாக கோவை வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,



தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மிகப்பெரிய கருப்பு தினம் எனவும், கள்ளக்குறிச்சி சம்பவத்தை யாராலும் ஏற்று கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் திமுக அரசின் கையாளாகத்தனத்தை காட்டுவது மட்டுமல்லாமல், இது போலி திராவிட மாடல் என்றும், ஆட்சிக்கு வந்தததும் மதுவிலக்கு என்றார்கள், ஆனால் பல இடங்களில் இன்று மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசு இந்த சம்பவத்திற்கு முழுபெறுப்பேற்பதோடு, மதுவிலக்கு துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த அரசு கள்ளசாரயத்திற்கு துணை போகின்ற அரசாக உள்ளதாகவும், மக்களின் உயிரை எடுக்கின்ற அரசாக உள்ளதாகவும்,எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என்பதால் பொது வெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் நடந்து பலமணி நேரமாகியும் இதுவரை நிகழ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஏன்பார்க்க வில்லை என கேள்வி எழுப்பியவர், மக்களை சந்திக்க முடியாத நிலையில் முதல்வர் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பேசியவர், 'மரக்காணம் சம்பவத்திலும் சிபிசிஐடி தான் விசாரித்தது, ஆனால் சிபிசிஐடி விசாரணை என்பது, சம்பவத்தை மூடி மறைக்கின்ற செயலாக தான் பார்க்கிறேன் என்றும் குறிப்பாக தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'இச்சம்பவம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சியினர் யாரும் வாய்திறக்கவில்லை. திமுக அரசின் மீது விமர்சனம் செய்ய அவர்கள் தயங்குகிறார்கள்' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...