ஈஷா மின் தகன மேடை கட்டுமானம் சர்ச்சை: ஆலாந்துறையில் ஈஷா ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம், ஆலாந்துறை முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா மின் தகன மேடை அமைக்கப்பட்ட சர்ச்சைக்குச் செயலில், ஈஷா ஆதரவாளர்கள் மீது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதாக வழக்குப்பதிவு.


கோவை: கோவை மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரி இருந்தார்.

இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா எனவும், பழங்குடி கிராம மக்களுக்குப் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்டறிய சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினரைத் தடுத்து நிறுத்தி, ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேலும், முற்போக்கு அமைப்பினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அளித்த புகாரின் அடிப்படையில், ஈஷா யோகா மைய ஆட்களுக்கு எதிராக பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல், முறையற்று தடுத்தல் என IPC Sec 341, 506(1), 3 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...