பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் மளிகை கடையில் திருட்டு – காவல்துறை விசாரணை

இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் பகுதியில் உள்ள வஞ்சிபாளையம் பிரிவில் தனியார் மளிகை கடை ஒன்றில் திருட்டு சம்பவம் நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

வழக்கம் போல 17ஆம் தேதி இரவு 10 மணியளவில் கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு ராஜா சென்ற நிலையில், நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.



உள்ளே சென்று பார்த்தப்போது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை யினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் சுமார் ரூ.30,000பணம் திருடு போனது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...