கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் குவியும் பக்தர்கள்

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும்  வெகுவிமர்சையாக திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது.



அதன்படி இவ்வாண்டு திருவிழா கடந்த மார்ச் 28ம் தேதி துவங்கப்பட்டு தொடர்ந்து வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று வரை நடைபெறவுள்ளது.



கோவில் விழாவின் ஒருபகுதியாக இன்று மதியம் பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புலியகுளம் பகுதி மக்கள் மட்டுமின்றி கோவையின் பல்வேறு பகுதியில் இருந்தும் பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் பங்கேற்று பூவோடு எடுத்து வீதிவுலா வந்தனர்.



மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்த பக்தர்கள் புலியகுளத்தில் இருந்து ஒலம்பஸ், ரேஸ்கோர்ஸ் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தையே அடைந்தனர்.



மேலும், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் உடலில் அழகு குத்தியும், வாயில் மிகப் பெரிய அளவிலான அழகு குத்தியும் வீதியுலா வந்து அம்மனை வழிபட்டனர்.



கோவிலில் குவிந்துவரும் பக்தர்களுக்கென பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆங்காங்கே மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகின்றனர்.

இம்மாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டு வருவதால் அப்பகுதியில் காவல்துறையினர் பலர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...