ஈஷா மின் தகன மேடை விவகாரம் - முட்டத்துவயல் கிராமத்தில் தபெதிக மற்றும் ஈஷா ஆதரவாளர்கள் மோதல்

முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை அமைத்துள்ள மின் தகன மேடையால் பாதிப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அங்கு சென்றனர். அப்போது, தபெதிக-வினருக்கும், ஈஷா யோகா மைய ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், ஆலாந்துறை இக்கரை போளுவாம்பட்டி அருகே உள்ள முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், குடியிருப்பு மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டி முட்டத்துவயல் கிராமத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



இந்நிலையில், மனுதாரர் எஸ்.என்.சுப்பிரமணியன் மனுவில் குறிப்பிட்டது போல விதிமீறல் நடந்துள்ளதா? எனவும், பழங்குடி கிராம மக்களுக்கு பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கண்டறிய தந்தை பெரியார் திராவிடர் கழகம், வெள்ளியங்கிரி பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் இணைந்து உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்தனர்.

மேலும், இக்குழுவினர் நேற்று ஜூன்.14 வேன் மூலம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில் அருகே சென்ற போது, அங்கிருந்த ஈஷா யோகா மைய ஊழியர்கள், ஈஷா ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்மைக் கண்டறியும் குழுவினரை உள்ளே செல்ல அனுமதிக்காமல், சாலையின் குறுக்கே மாட்டு வண்டியை வைத்து தடுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இது ஒரு கட்டத்தில் மோதலாக மாறிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆலாந்துறை போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஈஷா ஆதரவாளர்கள் உண்மைக் கண்டறியும் குழுவினர் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இரு தரப்பினரும் ஆலாந்துறை காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...