திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கோவை வருகை

கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று மாலையில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ள நிலையில், விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா இன்று மாலை கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உட்பட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். விழாவிற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி கோவை அவிநாசி சாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் அமைச்சர்கள், அதற்கு பின் வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமரும் வகையிலும், தொண்டர்களுக்காக 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும், நூற்றி ஒன்றாவது ஆண்டு துவக்க விழாவையும் நினைவு கூறும் வகையில் மேடையில் நிறுவுவதற்காக சுமார் 8 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதியின் இரண்டு திரு உருவ சிலைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஏராளமானோர் இந்த விழாவிற்கு வருவார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட உள்ள நிலையில், விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கொடிசியா வளாகத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகின்ற நிலையில், அவிநாசி நெடுஞ்சாலை போக்குவரத்து மாற்றம் செய்திருக்கின்றனர். புறவழிச்சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் l&t பைபாஸ் வழியாக திருச்சி சாலையில் இணைந்து சிங்காநல்லூர் ராமநாதபுரம் உக்கடம் பகுதிக்கு வரலாம். அதேபோன்று சக்தி சாலை வழியாகவும் புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.

அவிநாசி சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் எஸ்.என்.ஆர். மற்றும் பயனியர் மில்ஸ் வழியாக சேரன்மாநகர், காளப்பட்டி, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் மாநகரத்தில் வர அனுமதி தரவில்லை.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...