சிதலமடைந்த கோவை குற்றாலம் தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும் - சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும், காத்திருப்பு இடத்தில் நிழல் குடை அமைக்க வேண்டும், தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கட்டாயம் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியாக கோவை குற்றாலம் திகழ்ந்து வருகிறது.

இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தொங்கு பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. வனப்பகுதிக்கு நடுவே மரத்தாலான பாலத்தில் குழந்தைகள், மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் வயதானவர்களும் அதில் நடந்து சென்று புதிய அனுபவங்களை பெற்று வந்தனர்.



இந்நிலையில் தொங்கு பாலம் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே முறையான பராமரிப்பு இல்லாததால் அப்பாலம் சிதலமடைய துவங்கியது.

அதன் பிறகு தொங்கு பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.



கடந்த 10 ஆண்டுகளாக சிதலமடைந்த நிலையில் உள்ள தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து வனத்துறையினரும் தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் அருவியில் இருந்து நுழைவு வாயில் வரை செல்ல சுற்றுலா பயணிகள் காத்திருக்கக் கூடிய இடத்தில் நிழல் குடை அமைக்க வேண்டும், தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்துக் கொடுக்க வேண்டும், பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் கோவை குற்றாலம் சுற்றுலா தளம் மேம்பாடு குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

Newsletter

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...