கேஎம்சிஎச் மருத்துவமனையை மூட வேண்டும் - கோவை சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு நபர் ஒருவர் தர்ணா

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ராஜா என்பவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கேஎம்சிஎச் மருத்துவமனையை மூட வேண்டும் என்று கோவை சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு ரகுநாத் என்பவர் தனி ஆளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் கடந்த மாதம் ராஜா என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகிகள், காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மருத்துவமனை நிர்வாகிகள், காவலர்கள் உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இந்த சம்பவம் மருத்துவமனையில் நடைபெற்றதால் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை இது குறித்து விசாரணை நடத்தி மருத்துவமனையை மூட வேண்டுமென ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தார்.

இந்நிலையில் மனு அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறி சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு இன்று ஜூன்.12 அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுப்பட்டார். தர்ணாவில் ஈடுப்பட்ட அவர் மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரசு அதிகாரிகள் செயல்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...