கோவையில் நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் இந்தியன் வங்கி மற்றும் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன்

கோவை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 57-வது நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி மற்றும் பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.


கோவை: கோவையில் வஉசி உள்விளையாட்டு அரங்கில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் 21-வது சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் கடந்த ஜுன் 5-ம் தேதி துவங்கி நேற்று வரை 5 நாட்களுக்கு நடைபெற்றது.



இதில் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற 8 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் விளையாடிது.



இதில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, சென்னை- இந்தியன் வங்கி அணி, பெங்களூரு-பாங்க் ஆஃப் பரோடா அணி, லக்னோ-உத்திரபிரதேச போலீஸ் அணி, புது தில்லி-மத்திய செயலக அணி, சென்னை- லயோலா அணி, திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகள்.



பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் -கேரளா மாநில மின்சார வாரியம் அணி, மும்பை-மத்திய இரயில்வே அணி, மும்பை-மேற்கு இரயில்வே அணி, சென்னை-தென்னக ரயில்வே அணி, சென்னை-ரைசிங் ஸ்டார் அணி, கெல்கத்தா-கிழக்கு இந்திய அணி, செக்கந்திராபாத் - தென் மத்திய இரயில்வே அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் உட்பட 8 அணிகள் பங்கேற்றது.



57-வது நாச்சிமுத்து கவுண்டர் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பெற்ற வருமான வரி அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர். என். மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த பேங்க் ஆஃப் பரோடா அணிக்கு பரிசாக ரூ.20 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.



பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற தென் மத்திய இரயில்வே அணி அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற தென்னக இரயில்வே அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பிடித்த கேரளா மாநில மின்சார வாரிய அணிக்கு பரிசாக ரூ.15 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த கிழக்கு இரயில்வே அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னக இரயில்வே அணியின் வீராங்கனை ரஷி கோத்தானி என்ற வீராங்கனைக்கு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற விருதும் வழங்கப்படும்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...