கோவை போத்தனூரில் பெண்ணிடம் ரூ.7,90,500 ஆன்லைன் மோசடி

கோவை போத்தனூரை சேர்ந்த ஜெயம்மாளிடம் ஆன்லைன் மூலம் ரூ.7,90,500 மோசடி செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் ரயில் நகரை சேர்ந்தவர் ஜெயம்மாள்(48). இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அதில், உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து விவரங்களை தேடினார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நீங்கள் டெலிகிராம் குழுவில் இணைந்து நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறினார். 

இதனை நம்பிய ஜெயம்மாள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.7,90,500 செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த விதமான லாப தொகையும் கிடைக்கவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயம்மாள் அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மொத்தமாக ரூ. 10 லட்சம் செலுத்தினால் மட்டுமே லாபம் மற்றும் அசல் தொகையை திரும்ப பெற முடியும் என தெரிவித்துள்ளார். மொத்தமாக அந்த மர்ம நபர் ரூ. 7,90,500ஐ ஏமாற்றி விட்டார்.

பின்னர் ஜெயம்மாள் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஜூன்.6 புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...