அன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி

கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை, அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜூன்.4 இரவு பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக அன்னூர் கோவன் குளம் நிரம்பிய நிலையில் காணப்பட்டது. 

இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அன்னூர் கோவன் குளம் முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து அந்த குளத்தில் உபரி நீர் வெளியேறி வருகிறது. உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்குள் சென்றது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக அன்னூர் புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா நகர் அவென்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறையும் குளம் நிரம்பும் போதெல்லாம் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள், கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாக குற்றம்சாட்டினர்.

இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீரை உடனடியாக அகற்றவும், இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். 

மேலும். குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் இன்று. ஜூன்.5 ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...