கோவை வடமதுரையில் தனியார் வங்கி மேலாளரிடம் ரூ.48.50 லட்சம் நூதன மோசடி – போலீசார் விசாரணை

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி தனியார் வங்கி மேலாளர் கிருஷ்ணராஜியிடம் ரூ.48.50 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை வடமதுரையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(35). இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றிவருகிறார். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சமீபத்தில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து கிருஷ்ணராஜ் தனது விவரங்களை பதிவு செய்தார்.

பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ஒருவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய கிருஷ்ணராஜ், அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் பல கட்டங்களாக 48,57,115 ரூபாயை அனுப்பினார். ஆனால் அவருக்கு லாப தொகை கிடைக்கவில்லை. முதலீட்டு தொகையையும் திரும்ப பெற்ற முடியவில்லை.

அந்த நபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மீண்டும் பணம் அனுப்பினால் மட்டுமே, நீங்கள் செலுத்திய தொகையை, லாபத்துடன் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மொத்தமாக 48,57,115 ரூபாயை மோசடி செய்து விட்டனர்.இதனால் ஏமாற்றமடைந்த கிருஷ்ணராஜ் இது குறித்து நேற்று ஜூன்.2 கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...