உடையாம்பாளையத்தில் தண்ணீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - காரணம் குறித்து காவல்துறை விசாரணை

தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலைப்பார்த்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்ற தொழிலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு தொழிலாளரும் மயங்கி தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் புதிய வீடு கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் கூலி தொழிலாளர்கள் 7 பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மே.31 ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்து தொட்டிக்குள் விழுந்து உள்ளார்.

இதனை பார்த்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மேஸ்திரி குமார் என்பவர் சத்தம் போட்டபடி சென்று உள்ளார். அவரும் மயக்கம் அடைந்து விழுந்து இரண்டு பேரும் உயிரிழந்தனர்.



இந்நிலையில் சக தொழிலாளர்கள் அவர்களின் உடல்களை மீட்டனர்.



இது குறித்து சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொட்டிக்குள் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தார்களா? அல்லது மூச்சுக்காற்று குறைந்த காரணத்தால் உயிரிழந்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் அவர்கள் உயிரிழந்ததற்கான காரணங்கள் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...