கட்சி பிரதிநிதி போல மாவட்ட ஆட்சியர் பேசுவதாக மனுதாரர் புகார்!

கோவையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதித்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் செய்ய முடியும் என கோவை மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலால் மனு அளிக்க வந்தோர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் இருந்த 153 மதுபானக்கடைகள் மூடப்பட்டன. ஆனால், மூலடப்பட்ட கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.



இக்கடைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூடப்பட்ட மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் பகுதி பொதுமக்கள் மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது மதுபானக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுவினை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இராமநாதபுரம் 75-வது வார்டு மணிகண்டன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கோவையில் 153 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 



ஆனால், மூடப்பட்ட மதுபானக்கடைகளில் தொடர்ந்து மறைமுகமாக மது விற்பனை நடந்து வருகிறது. இராமநாதபுரம் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை, நஞ்சுண்டாபுரம், புளியகுளம், 80 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் தொடர்ந்து மது விற்பனை கள்ளத்தனமாக நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. 

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளித்த போது, "மூடப்பட்ட மதுபானக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுபானக்கடைகளை திறந்தால் தான் சாலை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்" என ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 



மாவட்ட ஆட்சியரின் இந்த பதில், கட்சி பிரதிநிதி போல உள்ளது என புகார் தெரிவித்தார்.

இதேபோல ஒண்டிப்புதூர், காளப்பட்டி, ரத்தினபுரி, பாப்பநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்டவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புதிதாக மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம், மதுபானக்கடைகளை திறப்பதில் மட்டும் முனைப்புடன் செயல்படுவதாக புகார் தெரிவித்த பெண்கள், மதுபானக்கடைகளினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடியிருப்பு பகுதிகளில் மதுபானக்கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர். மதுபானக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரேநாளில் ஏராளமான பகுதி பொதுமக்கள் நடத்திய போராட்டங்களினால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...