கோவை தனிஷ்க் நகை கடையில் 100 சதவீதம் தங்க பரிமாற்றம் - புதிய திட்டம் அறிமுகம்

கோல்டு எக்சேஞ்ச் பாலிசி திட்டத்தின் மூலம் வாடிக்ககையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளுக்கு கழிவே இல்லாமல் அதற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்டு புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ளலாம். இந்த திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் வெள்ளக்கிணறு பகுதியில் இயங்கிவரும் தனிஷ்க் நகை கடையில், அந்நிறுவன மண்டல வணிக மேலாளர் சந்திரசேகர், வட்டார வணிக மேலாளர் வினீத், அசோகன் முத்துசாமி

பிரான்சைஸ் நிர்வாக இயக்குனர் ஆகியோர் 100 சதவீதம் தங்க பரிமாற்றம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.



புதிய திட்டம் குறித்து அவர்கள் கூறுகையில், தனிஷ்க் நகை கடையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கான 100 சதவீதம் தங்க பரிமாற்றம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதன்படி வாடிக்கையாளர்களின் பழைய தங்கத்திற்கு அதிகப்பட்ச மதிப்பை வழங்கிட திட்டமிட்டு கடந்த ஒருவார காலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



கோல்டு எக்சேஞ்ச் பாலிசி என்ற திட்டத்தின் மூலம் வாடிக்ககையாளர்கள் தங்களுடைய பழைய நகைகளுக்கு கழிவே இல்லாமல் அதற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்டு புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ள இந்த ஒரு அரிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்திற்கான அதிகபட்ச மதிப்பை பெறுவதை உறுதிப்படுத்துகிறது.



இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடையிலிருந்தும் வாங்கிய 20 கேரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை தனிஷ்க்கில் அளித்து புதிய ஆபரணங்களாக மாற்றிக் கொள்ளலாம். இந்த தங்கபரிமாற்றம் திட்டத்தின்கீழ் தனிஷ்க்கின் சிறப்பான தங்க நகைகளான க்ளாஸ் குந்தன், குந்தன் போல்கி, ஓபன் போல்கி, பிஜேடபிள்யூஎஸ், வண்ணகற்கள் மற்றும் இன்னும் பல பிரிவுகளிலான நகைகளையும் தனிஷ்க் தங்க பரிமாற்றம் திட்டம் மூலம் வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கூறினர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...