கோவை ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்ஸில் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட கிளீனர் கைது

ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்லில் இருந்து பயணிகள் இறங்கிகொண்டிருந்தபோது, ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட ஆம்னி பேருந்தின் கிளீனர் சுபாஷ் சந்திர போசை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: விருதுநகர் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் கோவை நோக்கி வந்தது. பஸ்ஸில் சரவணம்பட்டி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஊழியரும் பயணம் செய்தார்.

இந்த நிலையில் நேற்று மே.29 காலை கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகில் ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கிளீனர் ஆக பணியாற்றி வரும் மாயவரம் மஞ்சில்குடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (41) என்பவர் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கிளீனர் சுபாஷ் சந்திரபோஸை கணவர் மற்றும் சக பயணிகள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இறங்க உதவி செய்வதற்காகத்தான் கையை நீட்டியதாக கூறினார். இதை ஏற்காத அவர்கள் அவரை சத்தம் போட்டனர். ஆனால் அவர்களை மிரட்டிய அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் இது குறித்து ஐடி பெண் ஊழியர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஐயாசாமி பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆம்னி பஸ் கிளீனர் சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.

Newsletter

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...