தாராபுரத்தில் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் - வட மாநில தொழிலாளி கைது

தாராபுரம் பகுதி பழனி பைபாஸ் சாலையில் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டுவந்த வடமாநிலத்தை சேர்ந்த சபிலா குமாரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து, அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழனி பைபாஸ் சாலை அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு காவல் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் துறை ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் மதுவிலக்கு போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் பழனி பைபாஸ் சாலை அருகே உள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார்.



இதனால் சந்தேகமடைந்து மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் குமார் என்பவரின் மகன் சபிலா குமார் வயது 27 என்பது தெரியவந்தது. சபிலா குமார் அவிநாசி எம்.நாதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

சபிலா குமார் அவ்வப்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்து திருப்பூர், ஈரோடு, தாராபுரம், பழனி ஆகிய பகுதிகளில் உள்ள வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்தது.

அதேபோன்று இன்று தாராபுரம் பகுதியில் பழனி பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த சபிலா குமார் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வந்திருந்தார். இதைத்தொடர்ந்து மதுவிலக்கு காவல்துறையினர் சபிலா குமாரை கைது செய்து அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...