கோவை ஏஜேகே கல்லூரியில் பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சித்துறை தொடக்கம்

மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சி ஏஆர்/விஆர் அனுபவ மையத்தை நிறுவியதன் மூலம் கல்வி தொழில்நுட்பத்தில் கோவை ஏஜேகே கல்லூரி ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜூ பெருமிதம் தெரிவித்தார்.



கோவை: தன்னாட்சி தகுதியுடன் தேசியத் தரச் சான்றும் A+ தர மதிப்பீடும் பெற்றுள்ள கோயம்புத்தூர் நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சி துறை (ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) (AR/VR)) அறிமுகப்படுத்திய இந்தியாவின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிடையே முதல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய்நிகர் காட்சி அனுபவ மையம் 22.05.2024 அன்று ஏஜேகே கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.



ஏஜேகே கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜு வரவேற்புரை வழங்கினார். அவர் தம் உரையில், மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சி ஏஆர்/விஆர் அனுபவ மையத்தை நிறுவியதன் மூலம் கல்வி தொழில்நுட்பத்தில் கோவை ஏஜேகே கல்லூரி ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பாரதியார் பல்கலைக்கழகத்தில் கீழ் இணைந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிடையே ஏஜேகே கல்லூரியில் முதல் பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சித்துறை துவங்கப்பட்டுள்ளது பெருமையளிக்கக்கூடியதாய் உள்ளது என்றார்.



இந்தக் கல்வியாண்டில் புதுமையான முன்முயற்சியின் மூலம் கொண்டு வந்துள்ள BCA Augmented Reality/Virtual Reality (AR+VR) கல்வி பாடத்திட்டத்தில் ஏஆர்/விஆர் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் கற்றல் முறைகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கீழ் இணைந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிடையே ஏஜேகே கல்லூரியில் முதல் பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி / மெய் நிகர் காட்சித்துறை ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியின் செயலர், முனைவர்.பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் விழாவிற்கு தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார்.



மிக முக்கியமாக வரும் மற்றும் வளரும் தலைமுறைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய நோக்கத்தோடுதான் இம்மாதிரியாக தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை எமது ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்துள்ளது. ஏஜேகே கல்லூரி வலைத்தளத்தையும் ஏஆர் விஆர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைத்துள்ளோம். மாணவர்கள் கல்லூரியின் வகுப்பறை, ஆய்வகம், நூலகம் போன்ற அனைத்தையும் தனித்தனியாக அவர்கள் ஏஆர், விஆர் தொழில்நுட்பத்தில் தெளிவாக பார்த்து அனுபவிக்க முடியும்.

அன்றாட வாழ்க்கையில் கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துதல், மற்றும் டிஜிட்டல் உலகத்துடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் புரட்சியை ஏற்படுத்துதல் ஆகியவை ஏஆர்/விஆரில் அடங்கும். ஏஆர் விஆர் தொழில்நுட்பம் வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லி விட முடியாது. இதை அனுபவித்தால் மட்டுமே அதன் பயனை புரிந்துகொள்ள முடியும் என்றார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிடையே ஏஜேகே கல்லூரியில் முதல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சி அனுபவ மையம் முதன் முதலாக கொண்டுவந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் இணைத்து, இடைநிலை ஆராய்ச்சியை ஏர் விஆர் அனுபவ மையம் வளர்க்கிறது. இது மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் ஆய்வு செய்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், ஒத்துழைப்பதற்கும் புதுமையான வசதிகளை வழங்குகிறது.

ஏஆர்/விஆர் அனுபவ மையங்கள் தகவல் பரிமாற்றத் தொடர்புகளை வழங்குகின்றன. இது மாணவர்களை ஆழமான தொழில்நுட்பங்களை நேரடியாக ஆராய வழிவகை செய்கிறது. கற்றல் வளத்தை எளிதாக்குகின்றன. படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன. சிக்கலான பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும் மாணவர் ஈடுபாட்டுடன் கற்பதை தக்கவைக்கவும் செய்கின்றன.

ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) என்பது டிஜிட்டல் கூறுகளை உள்ளடக்கிய உண்மையான உலகிற்கு நம்மை கொண்டு செல்கிறது. ஏஆர்/விஆர் தொழில்நுட்ப வகுப்பறைகள், அறுவை சிகிச்கை முறைகளிலும், மெய்நிகர் சுற்றுப்பயணங்களில், பாதுகாப்பு பயிற்சிகளிலும், சமூக தொடர்புகளிலும் பயன்படுகிறது. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கீழ் இணைந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிடையே ஏஜேகே கல்லூரியில் முதல் பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சித்துறை AR/VR டெவலப்பர், 3D கலைஞர்/மாடலர், பெரும்பாலும் கிராபிக்ஸ் புரோகிராமிங், ஆகியவற்றில் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. வன்பொருள் பொறியாளர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தயாரிப்பு மேலாளர், தர உத்தரவாதம் (QA) சோதனையாளர் போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்று அவர் எடுத்துரைத்தார்.

வேந்தன் மேலாளர், சைபர் ரிஸ்க், ஆலோசகர் டெலாய்ட் ஏஆர்/விஆர் அனுபவ மையத்தை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றறினார். அவர் தம் துவக்கவுரையில் கணினியின் வளர்ச்சி மிகப்பெரிய உயரத்தை தொட்டுள்ளது என்றும், பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சித்துறை, ஏஆர் விஆர் பாடத்திட்டம் கோவை நவக்கரை என்ற ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஏஜேகே கல்லூரியில் கொண்டு வந்துள்ளது வரவேற்க்கதக்கது மட்டுமல்லாமல் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடியதாகும். மாணவர்களுக்கு இந்தப்பாடத்திட்டம் மிகப்பெரிய வரபிரசாதம் என்றும், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். ஏஆர்,விஆர் தொழில்நுட்பம் கல்வி, மருத்துவம், இராணுவம் போன்ற துறைகளில் அதிகளவில் பயனுள்ளதாக உள்ளது. ஏஆர் விஆர் தொழில்நுட்பத்துடன் சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களுடன் இணைத்து எவ்வாறு செயல்படுத்த முடியும் என்றும் விளக்கிக்கூறினார்.

பிரியதர்ஷினி கார்த்திக் ராம், சைபர் பாதுகாப்பு மேலாளர், கேப்ஜெமினி, சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் ஏஜேகே கல்லூரி நல்ல கற்றல் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிறைய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என்று பேசினார். 

கௌரவ விருந்தினராக பங்குபெற்ற கருணாகரன் நாகராஜன், மேலாளர், மனித வளம், டெலாய்ட் அவர் தம் சிறப்புரையில், எதிர்காலத்தில் தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு ஆரோக்கியமான போட்டிகள் ஏற்படும். மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை நிறைய கற்க வேண்டும் என்றார்.

ஏஆர் விஆர் அனுபவ மையம், பிசிஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி/மெய் நிகர் காட்சித்துறை தொடக்க விழாவில், துறை தலைவர்கள், புலன்முதன்மையர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஏஆர் /விஆர் தொழில்நுட்பத்தில் ஏஜேகே கல்லூரி வலைத்தளத்தை பார்த்து தங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை பெற்றனர். 

Newsletter

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...