மாணவர்கள் தாக்கியதில் செல்போன் திருடியவர் பலி- இரண்டு மாணவர்கள் கைது

கோவை சரவணம்பட்டியை அடுத்த வையாபுரி நகரில் செல்போனை திருடிக்கொண்டு ஓடிய மைக்கேல் என்ற நபரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி வையாபுரி நகர் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக்கொண்டு ஓடியுள்ளார். இதை பார்த்த மாணவர்கள் அவரை விரட்டியதில், மாடியில் இருந்து செல்போன் திருடிய இளைஞர் குதித்துள்ளார். இதில் காயமடைந்த அவரை பிடித்து தாக்கிய மாணவர்கள், அவரிடம் விசாரித்த போது செல்போனை திருடியவர் பெயர் நாகர்கோவிலை சேர்ந்த மைக்கேல் லிபர்டி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவர்கள் செல்போன் திருடிய மைக்கேல் லிபர்டி வீட்டிற்கு போன் செய்து தகவல் தெரிவித்ததுடன், மீண்டும் அவரை தாக்கி அதே இடத்தில் போட்டு விட்டு கல்லூரிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் காயங்களுடன் கிடந்த மைக்கேல் லிபர்டியை அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகமரணம் என வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மைக்கேல் லிபர்டியின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்தனர். 

இந்நிலையில் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மைக்கேலின் உறவினர்கள், நண்பரை பார்ப்பதற்காக மைக்கேல் கோவை வந்ததாகவும், அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கை சந்தேக மரணமாக பதியாமல் கொலை வழக்காக பதிய வேண்டும் எனவும் அப்போதுதான் உடலை பெற்றுச்செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவில்பாளையம் காவல் துறையினர் இதை கொலை வழக்காக மாற்றம் செய்ததுடன் சபரி, அந்தோணி என்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...