கோவையில் உயர் ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேர் கைது

கோவை கரும்புக்கடை போலீஸ் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் உயர் ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 5 இளைஞர்களை கைது செய்து, மெத்தபெட்டமைன் மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேக நபர்களாக இருந்து சுற்றித்திரிந்த 5 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து மெத்தம்பெட்டமைன் மற்றும் மருந்து குப்பிகள் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.



அதனைத் தொடர்ந்து, பிரவின் செட்டி, சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 116 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று (மே.16) செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதனை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த மாத்திரைகளை கர்நாடகாவில் இருந்து வாங்கி உள்ளதாக தெரிவித்த அவர் அங்கு ஊப்பிலி என்ற இடத்தில் மருந்து கடை வைத்து நடத்தி வரும் பிரவீன் செட்டி என்பவர் விற்று வந்ததாகவும் கோவையில் அவர் இந்த மாத்திரைகளை அதிகம் விற்பனை செய்துள்ளதாகவுன் தெரிவித்தார். 14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார். 

தற்பொழுது இவர்கள் பிடிபட்டதன் மூலம் சப்ளை பாயிண்ட் முழுமையாக நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் கோவை மாநகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாகவே இவற்றையும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

கோவையில் கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை குறைந்துள்ளதால் இது போன்ற மாத்திரைகளை நோக்கி செல்வதாகவும், கோவையில் இது போன்ற மாத்திரைகள் தடுக்கப்பட்டதை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் நேற்றைய தினம் (மே.15) காந்திபுரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தது குறித்தான கேள்விக்கு குடிபோதையில் வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிந்தே குடிபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கக்கூடும் எனவும் எச்சரித்தார். மேலும் இது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ஆலோசித்து அறிவுரைகளை வழங்கி உள்ளதாகவும் கூறினார். மேலும் SIHS காலணியில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தான கேள்விக்கு அங்கு ரோந்து பணிகளை அதிகப்படுத்தி உள்ளதாக பதிலளித்தார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...