உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து பூஜ்ஜியம்; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணையில் நீர் வரத்து பூஜ்ஜியம் ஆன நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது.



இந்த நிலையில், தற்பொழுது போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு கடந்த சில தினங்களாகவே நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகள் தெரியும் அளவில் உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில், தற்போது 39.40 அடியாக உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...