கோவைக்கு வரும் ரயில் சேவைகளில் 3 நாட்களுக்கு மாற்றம் - ஒரு ரயில் ரத்து

ரயில் எண்.22504 திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், 10.05.2024 அன்று திப்ருகரில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 3 மணி நேரம் ஒழுங்குபடுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: ரயில்வே யார்டில் பணிகள் நடைபெறுவதால், கோவைக்கு வரும் ரயில்களின் சேவைகளில் மே 7, 9 மற்றும் 13 ஆம் தேதிகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி, ரயில் எண்.18190 எர்ணாகுளம் Jn - டாடாநகர் Jn (போத்தனூர், திருப்பூர் வழியாக) எக்ஸ்பிரஸ், 07, 09 & 13 தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும். மேலும், வசதியான இடத்தில் 1 மணி நேரம் ரயில் ஒழுங்குபடுத்தப்படும்.

1. ரயில் எண்.22504 திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், 10.05.2024 அன்று திப்ருகரில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 3 மணி நேரம் ஒழுங்குபடுத்தப்படும்.

மேலும், ரயில் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில்நிறுத்தப்படாது. போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

2. ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 11.05.2024 அன்று புது தில்லியில் இருந்து புறப்பட்டு 13.05.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வசதியான இடத்தில் 1 மணிநேரம் 40 நிமிடங்களுக்கு ஒழுங்குபடுத்தப்படும். மேலும், ரயில் இருகூர்-போத்தனூர் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் நிற்காது.

3. ரயில் எண்.12677 KSR பெங்களூரு-எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 13.05.2024 வசதியான இடத்தில் 1 மணிநேரம் ஒழுங்குபடுத்தப்படும். மேலும், ரயில் இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் மத்தியில் நிற்காது அதற்கு பதிலாக, போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 நிமிடம் நிறுத்தப்படும்.

அதேநேரத்தில்,ரயில் எண். 16843 திருச்சிராப்பள்ளி ஜங்சன்- பாலக்காடு டவுன் ரயில் 10ம் தேதி திருப்பூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.

திருச்சிராப்பள்ளியில் இருந்து திருப்பூருக்கு மட்டுமே ரயில் இயக்கப்படும். (10.05.2024) அன்று திருப்பூரில் இருந்து பாலக்காடு நகருக்கு இயக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...