குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு

குடிநீர் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: கோவையில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக குடிநீர் தட்டுபாட்டை போக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,



கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், குடிநீர் பிரச்சினை வராத அளவிற்கு அதிகமான கூட்டுகுடிநீர் திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து இருந்தோம் எனத் தெரிவித்த அவர், குளங்கள், அணைகள் தூர் வாரப்பட்டதாகவும் தெரிவித்தார். நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தபட்டது, ஆனால் இப்போது நீர்மேலாண்மையே இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக பில்லூர், சிறுவாணி, அழியார் அணை ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரம். இந்த அணைகள் தூர்வாரி இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட அமைப்பதில்லை எனவும், இது போன்ற குடிநீர் பிரச்சினை வரும் போது லாரிகள் மூலம் தண்ணீர் கொடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தண்ணீர் பல இடங்களில் வழங்கப்படுவதில்லை எனவும், அதேபோல் மாநகராட்சியில் முறையாக குப்பை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

சிறுவாணி அணையில் கடைசி 5 அடி தண்ணீர் தேக்க விடுவதில்லை எனத்தெரிவித்த அவர், அத்திகடவு அவினாசி திட்டத்தை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை எனவும், கோவை எஸ்ஐஎச்எஸ் பாலம் விரைத்து முடிக்க வேண்டும் என்றும், நடைபெற்று வரும் திட்டங்களை வேகமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொதுகழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும், போர்வெல் போட விண்ணப்பித்தால் அனுமதிக்கவேண்டும் என்றும், சாலைகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை வேகமாக போட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சியரிடம் தெரிவித்தாக அவர் தெரிவித்தார்.

தென்னை விவசாயிகள் லாரியில் தண்ணீர் வங்கி ஊற்றுகின்றனர். அதையும் அதிகாரிகள் தடுக்கின்றனர். பல இடங்களில் மண் எடுக்க விடுவதில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் முழுமையாக இயங்குவதில்லை என்றும் குடிநீர் பிரச்சினை விரைவில் சரி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...