கோவையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

மே.5 அன்று, கோவையில் சரவணம்பட்டி மற்றும் கீரணத்தம் பேருந்து நிலையம் அருகில் மற்றும் அன்னூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாக்கள் நடந்தன.


கோவை: கோவையில் அதிமுகவின் நடவடிக்கையில் சரவணம்பட்டி மற்றும் கீரணத்தம் பேருந்து நிலையம் பகுதிகளில் புதிய தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியை மே 5ஆம் தேதி கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் திறந்து வைத்தார்.



இந்த பந்தல்கள் பொதுமக்கள் தாகம் தீர்க்க உதவும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட இந்த பந்தல்களில் குடிநீர் வசதிக்காக பல்வேறு டேங்குகள் மற்றும் டப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்புப்படி, கோவை புறநகர் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பல தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்க உள்ளன. உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...