கோவை காந்திபுரத்தில் மர்ம நபர் செல்போன்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

நள்ளிரவில் முகத்தை மறைத்தபடி வழக்கறிஞர் வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை திருடி சென்ற மர்ம நபரை காட்டூர் போலீசார் தேடி வருகின்றனர். சுவர் ஏறி குதித்து செல்போன்களை திருடிச்செல்லும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு விஷ்ணு மற்றும் குகன் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது மீனாட்சியின் செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து மீனாட்சியின் தொடர்பு எண்களுக்கு அவரது மகன்கள் அழைத்த போது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது.

பணம் மற்றும் நகைகள் எதுவும் காணாமல் போகாத நிலையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் நள்ளிரவு நேரத்தில் முகத்தை மறைத்தபடி வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், காம்பவுண்ட் சுவரில் குதித்து வீட்டின் உள்ளே புகுந்து 2 ஆண்ட்ராய்டு போன்களை மட்டும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.



சிசிடிவி காட்சி ஆவணங்களுடன் மீனாட்சி மற்றும் அவரது மகன்கள் சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் நள்ளிரவில் முகத்தை மறைத்தபடி வீட்டுக்குள் புகுந்து செல்போன்களை மட்டும் குறிவைத்து திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது (ஏப்ரல்.30) இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...