பெண் குழந்தைகளை மதிக்கும் சமூகம் தான் வளர்ச்சி அடையும் மகிழ்ச்சி அடையும் -கவிஞர் அம்சப்பிரியா பேச்சு

பொள்ளாச்சி கோடங்கிபட்டியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் கல்வி விழிப்புணர்வு மற்றும் சமுதாய ஒத்துழைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓமனா தலைமை வகித்தார். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட கள அலுவலர் நம்பிராஜன் அனைவரையும் வரவேற்றார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் ஜெயக்குமார், அறிவொளி வீராசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவிஞர் அம்சப்பிரியா கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறப்பு பயிற்சி மையக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

அப்போது அவர் பேசும்போது; காலங்காலமாக ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. குழந்தைத் தொழிலாளர் மறுவாழ்வு திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டங்களின் பயனாக இன்று ஏழைக் குடும்பங்களை சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி கிடைத்துள்ளது. கல்வி என்பது வெறுமனே பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல. பொது இடங்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கற்றுத்தரப்பட வேண்டும். எந்த நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படுகிறார்களோ அங்கு தான் அனைவரும் நலமாக, வளமாக இருக்க முடியும். 

சமூகத்தில் உள்ள புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இவற்றிற்கு எதிராக குழந்தைகள் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு சமூகத்தை சேர்ந்த தேசத்தலைவர்கள் போராடித்தான் கல்வி கற்கும் உரிமையை கிராமங்கள் தோறும் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். அத்தகைய மதிப்புமிகு கல்விச் செல்வத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கவிஞர் அம்சப்பிரியா வலியுறுத்தி பேசினார். 

இந்நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர் பத்மாவதி நன்றி கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...