கோவையில் நடைபெற்ற மாபெரும் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாம்

கோவையில் நடைபெற்ற நாராயண் சேவா சன்ஸ்தானின் இலவச செயற்கை மூட்டு வழங்கும் முகாமில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற நாராயண் சேவா சன்ஸ்தானின் இலவச செயற்கை மூட்டு அளவீட்டு முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் செயல்பட்டு வரும் நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்க நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக இவ்வமைப்பின் முகாம் கோவையில் நடைபெற்றது. சோமையாம்பாளையம் கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ள மகேஸ்வரி பவன் அரங்கில் நடைபெற்ற இந்த முகாமில் கோவை,ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி என பல்வேறு தமிழகத்தின்மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா,கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளின் கை அல்லது கால் மூட்டுகளின் அளவீடுகள் மருத்துவர்கள் நேஹா, அனிக்தா, ராம்நாத் தாக்கூர் ஆகியோர் தலைமையில்20 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.



இதில் செயற்கை மூட்டு மற்றும் காலிபர்களுக்கானஅளவீடுகள் எடுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு அடுத்த கோவை முகாமில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டசெயற்கைக் கருவிகள் பொருத்தப்படும் என முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹரி பிரசாத் லத்தா குறிப்பிட்டார்.

முன்னதாக, முகாம் துவக்க விழாவில்,மகேஸ்வரி சங்கத்தின் தலைவர் கோபால் மகேஸ்வரி, மகேஸ்வரி பவன் செயலாளர் சந்தோஷ் முண்டாடா, மஹாகங்கோத்ரியின் தலைவர் ரஜத் கவுர், மேவார், செய்தி தொடர்பாளர் பகவான் பிரசாத் கவுர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...