புதுப்பையில் தாராபுரம் வட்டாட்சியர் சிறைபிடிப்பு - வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆற்றில் இறங்கி போராட்டம்

புதுப்பை பகுதியில் பாயும் அமராவதி ஆற்றில் முறைகேடாக அரசின் எந்தவொரு ஒப்புதலும் இன்றி கிணறு அமைக்கும் பணி துவங்கியுள்ளதாகவும், இதனால் வெள்ளகோவில் ஒன்றியம் பகுதிக்கும், நகர பகுதிக்கும் விநியோகிக்க கூடிய தண்ணீருக்கு தட்டுபாடுஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பையில் பாயக்கூடிய அமராவதி ஆற்றில் முறைகேடாக கிணறு அமைத்து தாராபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மூலனூருக்கு குடிநீர் எடுத்ததை தொடர்ந்து புதுப்பை பகுதி பொதுமக்கள் நடுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் வட்டாட்சியரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் தாலுக்கா மூலனூருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வெள்ளகோவில் அடுத்த புதுப்பை பகுதியில் பாயும் அமராவதி ஆற்றில் முறைகேடாக அரசின் எந்தவொரு ஒப்புதலும் இன்றி கிணறு அமைக்கும் பணி துவங்கியுள்ளனர். இதனால் வெள்ளகோவில் ஒன்றியம் பகுதிக்கும், நகர பகுதிக்கும் விநியோகிக்க கூடிய தண்ணீருக்கு தட்டுபாடுஏற்படும் வாய்ப்புள்ளது. இதே பகுதியில் கிணறு அமைக்கும் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.



எனவே இதனால் பல்லாயிரம்குடும்பங்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே வெள்ளகோவில் பகுதிக்காக தோண்டப்பட்ட கிணறு சுமார் 7 அடி இருக்கும் பட்சத்தில் தற்போது தண்ணீர் தேவைக்காக சுமார் 3 இடங்களில் அளவுகள் செய்யும் பணியும் இன்று காலை முதல் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த கிணறு இருக்கும் பகுதிக்கு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த வாரத்தில் பண்படங்கு சக்திவாய்ந்த வேட்டுகள் வைத்து சுமார் 40 அடி அகலத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு தண்ணீர் எடுக்க முயற்சி செய்ததை ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனியார் நிறுவனத்தினத்தினரும் அவர்களுக்கு உறுதுணையாகவும் அரசு அதிகாரிகளும் நேற்று திடீரென வெள்ளகோவில் நகரம் மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கிணறு அருகே எவ்வித அனுமதியும் இன்றி நேற்று காலையில் ஆற்றில் அளவுகள் எடுக்கப்பட்டு மூன்று இடங்களில் கிணறுகள் வெட்டப்படுவதாகவும் இதற்கு புதுப்பை ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும் பணிகளை துவங்கி உள்ளனர். இதை அறிந்த பொதுமக்கள் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்ஷன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூலனூர் வெள்ளகோவில் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து வெள்ளகோவில் போலிசாருக்கும், தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞான பிரகாஷ் மற்றும் தாராபுரம் வட்டாச்சியர் கோவிந்தசாமி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். மேலும் இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அதிகாரிகளை கிணறு வெட்டிய இடத்திற்கு அழைத்து சென்றனர்.



சுமார் 7 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தோண்டப்பட்ட குழிகளை மூடினால் மட்டுமே இந்த ஆற்றைவிட்டு வெளியேறுவோம் என வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்சன் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குழி தோண்டிய இடத்திலேயே அமர்ந்து கொண்டார். இதனால் பதற்றம் நிலவியது. பின்னர் இரவு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அமராவதி ஆற்றில் முறைகேடாக தோண்டப்பட்டது கிணற்றை மூடுவதாக உறுதியளித்தனர். மேலும் கிணறுகள் அமைக்க எடுத்து வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றனர்.

தனியார் கிணறுகள் வெட்டியதை மூடினால் மட்டும் போதுமா எவ்வித அறிவிப்பு ஆணைகளும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் ஆற்றில் இருந்து நீரை எடுத்து செல்ல கிணறுகள் வெட்டுவதோ அல்லது குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா பொதுமக்கள் போராடினால் மட்டும் தான் சம்பவ இடத்திற்கு வந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...