கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் வெள்ளலூர் குளத்தில் இருந்து சீமை கருவேல மரங்கள் அகற்றம்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை காப்பாற்றும் வகையில் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் உருவாக்கப்பட்டதே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகும்.



இக்குழுவினர் வார இறுதிநாளான ஒவ்வொரு ஞாயிறன்றும் நீர்நிலைகளில் களப்பணியில் ஈடுபட்டு தூர்வாரி வருகின்றனர். அதன்படி கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு வாரம் பேரூர் செல்வசிந்தாமணி குளத்தினை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.



அதனைத்தொடர்ந்து, இன்று எட்டாவது வாரமாக வெள்ளலூர் குளத்தில் இரண்டாவது களப்பணியில் ஈடுபட்டனர். இதில், வெள்ளலூர் குளத்தினை ஆக்கிரமித்து வளர்ந்திருந்த ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அதில் இருந்த ஆயிரக்கணக்கான கருவேல விதைகள் தனியாக அகற்றப்பட்டன. அந்த விதைகள் அனைத்தும் ஓர் இடத்தில் சேகரிக்கப்பட்டு முழுவதுமாக அழிக்கப்பட்டன.



இதைத்தொடர்ந்து, வரும் அடுத்த ஞாயிறன்று ஆத்துப்பாளம் அருகே வெள்ளலூர் தடுப்பணையில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றவுள்ளதாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...