வால்பாறையில் மேளதாளங்களுடன் திமுகவினரின் இறுதி கட்ட பிரச்சாரம் நிறைவு

திமுக கட்சியினர் காந்தி சிலை வளாகத்தில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நேற்று மாலை 6 மணி அளவில் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் வால்பாறையில் திமுக கட்சியினர் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்திலும், இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அதிமுகவினர் புதிய பேருந்து நிலையம் பகுதியிலும், பாரதிய ஜனதா கட்சியினர் அண்ணா திடல் பகுதியிலும் இறுதி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக நகரச் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் காந்தி சிலை வளாகத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



இதில் முன்னாள் நகர மன்ற தலைவர் கோ.கணேசன், திமுக ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும் திமுக கட்சியை வால்பாறை மக்களுக்கு செய்த சாதனைகளைப் பற்றியும், மகளிர் பேருந்து இலவச பேருந்து மற்றும் மகளிர் உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி வாக்கு சேகரித்தனர்.

கட்சியினர் மேள தாளங்கள் தட்டி டான்ஸ் ஆடி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு நிறைவு செய்தனர். இதில் நாங்க நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத்தலைவர் செந்தில்குமார், திப்பம்பட்டி ஆறுச்சாமி, ஜே.பாஸ்கர், செல்வம், மகுடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் காவல்துறையினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...