பவர் டெக்ஸ் இந்தியா ஒரு தனித்துவம் வாய்ந்த விசைத்தறித் திட்டம்- சைமா


சைமாவின் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் மற்றும் விசைத்தறி துறையிரும் இணைந்து மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை விசைத்தறி துறையினருக்கு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அது பவர்டெக்ஸ் இந்தியா திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்று சைமா தலைவரும், முன்னாள் விசைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் தலைவருமான எம்.செந்தில்குமார், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மராட்டிய மாநிலம் பிவாண்டியில் நேரடியாகவும், நாட்டின் மற்ற இடங்களில் காணொலி காட்சி மூலமும் துவக்கி வைத்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



இன்சிட்டு என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ் சாதாரண விசைத்தறியை நவீனப்படுத்துவது, குரூப் ஒர்க் ஷெட் திட்டம், நூல் வங்கி திட்டம், பொது வசதி மையம், விசைத்தறி நெசவாளர்களுக்கான பிரதான் மந்திரி கிரெடிட் திட்டம், விசைத்தறிக்கு சூரிய ஒளி மின் திட்டம், தகவல் தொழில்நுட்பம், விழிப்புணர்வு, சந்தை வளர்ச்சி, டெக்ஸ் வென்ச்சர் கேபிடல் பண்ட் மற்றும் நவீனப்படுத்தலுக்கு பண உதவி என பல்வேறு திட்டங்கள் பவர்டெக்ஸ் இந்திய திட்டத்தின் கீழ் அடங்கும்.

திருத்தியமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி, மாற்றியமைக்கப்பட்ட விரிவான விசைத்தறை வளர்ச்சி திட்டம், இன்சூரன்ஸ் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவையும் விசைத்தறி துறைக்கு ஏற்கனவே கிடைக்கிறது.

ஈரோட்டில் நடைபெற்ற பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தினை மத்திய ஜவுளித்துறையின் கூடுதல் செயலர் புஷ்பா சுப்பிரமணியம் துவக்கி வைத்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் சின்னய்யன், மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், ஜவுளி ஆணையர் அலுவலகத்தின் துணை இயக்குநர் ஓம் எம் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சைமா தலைவர் செந்தில்குமார் விசைத்தறி துறைக்கு அறிவித்துள்ள திட்டங்கள் உலகளவில் நமது நாட்டு விசைத்தறி துறை போட்டியிட வழி வகுக்கும் என்றும் தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்வதற்கு உதவும் என்றும் கூறினார்.

விசைத்தறி துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் திட்டத்திற்கு 50 முதல் 90 சதவிகிதம் வரையிலான மானிய திட்டம் மூலம் மின் செலவு மிச்சமாகும். இதனால், மானிய விலையில் அல்லது இலவசமாக மின்சாரத்தை விசைத்தறிகளுக்கு வழங்கும் மராட்டியம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மானிய செலவு நிதிச் சுமை மிகவும் குறையும் என்றும் சைமா தலைவர் கூறினார்.

மேலும், அனைத்து விசைத்தறி நெசவாளர்களும் செந்தில்குமார் விடுத்த வேண்டுகோளில், பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அனைவரும் பயன்படுத்தி உலகளவில் இந்த துறையை போட்டியிடும் வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...