எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை – சூலூரில் அண்ணாமலை பிரச்சாரம்

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன் 4ஆம் தேதியிலிருந்து 500 நாட்களில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கொண்டு வருவோம் என்று உறுதி அளிப்பதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசியுள்ளார்.



கோவை: கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுத்தூர், கிருஷ்ணாபுரம், கரையாம்பாளையம் பிரிவு, செஞ்சேரிமலை, பூராண்டாம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், இருகூர் பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று மாலை (ஏப்ரல்.16) தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் மக்கள் மத்தியில் பேசிய அவர், வரும் பாராளுமன்றத் தேர்தல், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை வலிமையாக, பொருளாதாரத்தில் முதன்மையாக மாற்ற, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகள் எடுக்க, நமது பிரதமர் கரங்களை, நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நமது கோவை பாராளுமன்றத் தொகுதியும், நமது பிரதமர் கொண்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் முழுமையாகப் பலன்பெற, இங்கிருந்தும், நாம் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.



வரவிருக்கும் தேர்தல், நாட்டுக்கான தேர்தல். நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் தகுதியான வலிமையான ஒரே பிரதமராக இருக்கிறார். வீட்டையும், நாட்டையும் காக்கும் ஒரே தலைவர் நமது பிரதமர் மோடி மட்டும்தான்.

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின், குடிதண்ணீர்ப் பிரச்சினை, உட்கட்டமைப்பு, விசைத்தறி, விவசாயப் பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வண்ணம், நூறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன் 4ஆம் தேதியிலிருந்து 500 நாட்களில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கொண்டு வருவோம் என்ற உறுதி அளிக்கிறேன். மேலும், ஒரு ஆண்டில், அடுத்த ஜூன் 4, 2025க்குள், விசைத்தறிப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களான, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்துக்கும் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி கிடைக்காமல் இருக்கிறது. வீடுகள் இல்லாதவர்கள் அனைவருக்கும் மோடி வீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தங்கள் முக்கியப் பணிகளான இவை எதையும் நிறைவேற்றவில்லை. கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,445 கோடி நிதி ஒதுக்கியும், சாலைகள் கூட சரிவர மேம்படுத்தப்படாமல், அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிராமங்களை சென்றடையாமல் வைத்திருக்கிறார்கள். கோவை வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், பத்து ஆண்டுகளாக தொகுதிக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

இவை அனைத்தும் மாற, கோவைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக, வளர்ச்சித் திட்டங்களுக்கும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்பட, ஜல் ஜீவன் திட்டம் மூலம், சுத்தமான குடிநீர் ஒவ்வொரு வீடுகளையும் சென்றடைய, ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேறிட, கோயம்புத்தூர் மாநகரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளும், நகரத்தின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வளர்ச்சி பெற, மத்திய அரசின் திட்டம் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதை கண்காணிக்க, கேள்வி கேட்க, நமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, அவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வசிக்க, உங்கள் அன்புத் தம்பி, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...