கோவையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு வரும் 17.04.2024 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 19.04.2024 வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை மற்றும் 04.06.2024 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி இன்று (ஏப்ரல்.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில்(FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல்(FL3A), மிலிட்டரி கேண்டீன்கள்(FL4(A) மற்றும் விமான நிலையத்தில் உள்ள மதுக்கூடம்(FL10), இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL11) உள்ளிட்ட அனைத்து FL1முதல் FLn (FL6-ஐ தவிர்த்து) வரை உள்ள உரிமத்தளங்களை 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு வரும் 17.04.2024 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 19.04.2024 வெள்ளிக்கிழமை இரவு 12 மணி வரை மற்றும் 04.06.2024 வாக்கு எண்ணிக்கை நாளன்றும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...

Kinathukadavu Murder Accused Detained Under Goondas Act

Mathesh, 21, who was arrested in connection with the murder of a 22-year-old man in Kinathukadavu, Coimbatore district,...

Coimbatore Police Constable M. Vijay Wins Gold at State-Level Anti-Sabotage Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS) won the gold medal in t...

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...