தொட்டிபாளையத்தில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சாலை மறியல்

அதிமுகவின் பிரச்சார வாகனத்தை பாஜக பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு சென்றது. இதனை கண்டித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரும் இன்று (ஏப்ரல்.5) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்துள்ளார்.

அப்போது அதிமுகவின் பிரச்சார வாகனத்தை பாஜக பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலையில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவின், தாங்கள் குறித்த நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜகவினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...