டெல்லி போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் விவசாயி உடைய அஸ்தி கலசம் கோவை வருகை

இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்த சுப்ரகன் சிங்கின் அஸ்திக்கு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.


கோவை: வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம்; பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா அரசு எல்லையில் தடுத்து நிறுத்தியது.



பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா் புகைக் குண்டுகளை ஹரியாணா போலீஸார் வீசினா்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். விவசாயி சுப்கரன் சிங் மரணத்துக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மரியாதை செலுத்தவும், கிசான் மஜ்தூர் மோர்ச்சா அமைப்பின் சார்பில் சுப்ரகன் சிங்கின் அஸ்தி கலசம் நாடு முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி இன்று (ஏப்ரல்.3) கோவை விமான நிலையம் வந்தடைந்த சுப்ரகன் சிங்கின் அஸ்திக்கு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி வே.ஆறுச்சாமி, தமிழ் புலிகள் கட்சியின் இளவேனில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சண்முகசுந்தரம் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...