பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் ER. ஈஸ்வரன் பரப்புரை

பிஜேபி அரசு தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை. ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள். எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை. முதலமைச்சரை இயங்க விடுவதில்லை என்று பிரதமர் மோடியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் சாடினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து திருவள்ளுவர் திடலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய போது., மத்தியில் ஆளும் பிஜேபி அரசால் பத்தாண்டுகள் இந்த நாடு சீரழிக்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. ஆனால் நாடு முன்னேறி விட்டது என்று சொல்கின்றார்கள்.



மோடியை முன்னிறுத்தி உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்து இந்தியா முன்னேறி விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள். குறிப்பாக தமிழ்நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு நிதி வழங்குவதில்லை. ஆளுநரை வைத்து அட்டூழியம் செய்கின்றார்கள். எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லை. முதலமைச்சரை இயங்க விடுவதில்லை. கடலுக்கு அடியில் சென்றும், வானத்தில் சென்றும், திருவள்ளுவரையும் சாமி கும்பிடுவர், ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ள மாட்டார். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் சிறு குறு தொழில்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது என ER.ஈஸ்வரன் பேசினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...