கோவையில் வீடு வீடாக சென்று பூத் சிலீப் வழங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3077 வாக்குசாவடிகளை சேர்ந்த 31,14,118 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலம் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


கோவை: மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், அம்மன்குளம் சாலை பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இன்று (ஏப்ரல்.1) தொடங்கி வைத்து, குடும்ப வாக்காளர்களுக்கான வாக்காளர் கையேட்டினை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு பணிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பி வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3077 வாக்குசாவடிகளை சேர்ந்த 31,14,118 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்' எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகள் (Voters Information Slip) வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலம் வழங்கும் பணியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன், 8,68,893 குடும்பத்திற்கு தலா ஒரு வாக்காளர் கையேடும் வழங்கப்படுகின்றது.

இவ்வாக்காளர் தகவல் சீட்டுகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள பகுதி மற்றும் வரிசை எண் உள்ளிட்ட வாக்காளர்களின் அடிப்படை விவரங்கள் இருக்கும். மேலும், வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்கியபின் அதற்கான ஒப்புதல் பெறப்படும்.

எனவே வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் தகவல் சீட்டுகளை பெற்றுக்கொண்டு தேர்தல் நாளான ஏப்ரல் 19" அன்று தவறாமல் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...