கோவையின் வளர்ச்சியை கொண்ட திட்டங்களை செயல்படுத்த எந்த கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாக கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேச்சு.


கோவை: கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று, கோயம்புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, கட்டுமானத் துறையில் சிறந்து விளங்கும் தொழில் முனைவோர்கள் மத்தியில் பா.ஜ.க மாநிலத் தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை உரையாற்றினார்.

பல்வேறு தொழில் நிறுவனங்கள், 200க்கும் அதிகமான கல்வி நிலையங்கள், இயற்கை வளங்கள் என வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை வளங்களும் இருந்தும், கோயம்புத்தூர் தனது முழுமையான வளர்ச்சியைப் பெற முடியாததின் காரணங்கள் குறித்துப் பேசினார்.



மேலும், கோயம்புத்தூரின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த இத்தனை ஆண்டுகள் எந்தக் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்கினார்.

அதேபோல, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதையும், அதற்குத் தேவையான தொலை நோக்குப் பார்வை உடையவர்களை, மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...