கோவையில் அண்ணாமலையை தோற்கடிப்பதுடன் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - நீதியரசர் ஹரி பரந்தாமன்

இந்தியாவில் 20 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. மத்திய அரசு ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.



கோவை: கோவையில் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பொது மேடை அமைப்பின் சார்பில் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கலந்து கொண்டு பேசினார்.

பாராளுமன்றத்திற்குள் நுழைந்து வெற்றிடத்தில் குண்டு வீசினார் பகத்சிங். அதே போல, 2023 டிசம்பர் அன்று இரு இளைஞர்கள் நமது பாராளுமன்றத்திற்குள் வண்ண பூச்சுகளை வீசினர். இந்திய மக்களுக்கு மோடியின் மோடி ஆட்சியினை சர்வாதிகாரத்தை கவனத்திற்கு கொண்டு வரும் விதமாக வீசி இருக்கின்றனர் என தெரிவித்தார். மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டுமா என்பது இந்த கருத்தரங்கின் தலைப்பு. அதற்கான பதில் மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் என நீதிபதி ஹரி பரந்தாமன்தெரிவித்தார்.



குறிப்பாக கோவையில் தமிழ்நாட்டுக்கு தளபதியாக இருக்கக்கூடிய அண்ணாமலை இங்கு வீழ்த்தப்பட வேண்டும், வீழ்த்தப்படுவது மட்டுமல்ல அவர் டெபாசிட் வாங்காத அளவிற்கு வீழ்த்தப்பட வேண்டும் என தெரிவித்தார். அதற்கான காரணங்களை நீதிபதி ஹரி பரந்தாமன் பட்டியலிட்டார்.

தமிழகத்தின் மீது மோடிக்கு சமீப காலமாக காதல் வந்திருக்கிறது எனவும், வாரத்திற்கு இரண்டு முறை வருகிறார் மோடி என தெரிவித்த அவர், தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தது, சென்னை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பணமும் மனித இழப்புகளும் ஏற்பட்ட பொழுது பிரதமர் மோடி வரவில்லை. மணிப்பூர் மாநிலம் எரிந்து கொண்டு இருக்கிறது. இரு இன மக்கள் மோதிக் கொண்டு இருக்கிறார்கள். மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் செல்லவில்லை என தெரிவித்தார்.



சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் வராதது ஆச்சரியம் இல்லை. மணிப்பூருக்கு கூட செல்லாதவரை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார். வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு பைசா வெள்ள நிதி தரவில்லை எனவும், மெட்ரோ திட்டத்திற்காக தமிழக அரசுக்கு, மத்திய அரசு பாதி தொகைகளை வழங்க வேண்டும். மெட்ரோ திட்டத்திற்கும் நிதி வழங்காத மோடியை ஏன் தோற்கடிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். கல்வி மாநில பட்டியலுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் சொல்லியிருக்கிறது. அப்படி வந்தால் நீட் இருக்காது என தெரிவித்த அவர், மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தது எல்லாம் திமுக அதிமுக அரசுகள். தமிழகத்தில் ஒரு கல்லூரி கூட மத்திய அரசுக்கு கிடையாது என தெரிவித்தார்.



ஈழமக்கள் ஒரு லட்சம் பேர் இங்கே வந்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு வந்தால் குடியுரிமை கிடையாது. இலங்கையில் இருந்து அகதியாக வரும் தமிழ் மக்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் 20 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. மத்திய அரசு ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம் வைத்திருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழில் வழக்காடு நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஏன் அண்ணாமலை அங்கு செல்லவில்லை. இந்த அதிகாரம் ஒன்றிய சர்க்காரிடம் தான் இருக்கிறது என தெரிவித்த அவர், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை இன்னும் சென்னை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நீதிமன்றம் என ஏன் மாற்ற மாட்டேன் என்கின்றனர் எனவும் தெரிவித்தார். சேலத்தில் பேசும் போது திமுக, காங்கிரஸ் கட்சிகள் இந்துக்களை அவமதிக்கின்றனர் என்கின்றார் மோடி, மதத்தை பற்றி பிரதமர் பேசுகின்றார் என தெரிவித்த அவர்,இந்து கருத்து என்பது சாதிய கருத்து அதைதான் வேண்டாம் என்கின்றோம் எனவும் மதம் மாறினாலும் சாதி கூட வரும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...