நாடாளுமன்ற தேர்தல்; கோவை தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜ்குமார் அறிமுக கூட்டம்..!

இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த கருத்துரை வழங்கினர்.


கோவை: கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹால் வளாகத்தில் கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் கல்பனா, கோவை மக்களவை தொகுதி சிபிஎம் எம்.பி., நடராஜன் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது குறித்த கருத்துரை வழங்கினர்.

இதில் அமைச்சர் முத்துசாமி உரையாற்றிய போது, அமைச்சர் ராஜா உயரத்திற்கு கோவை மக்களவை தொகுதியின் வெற்றி இருக்கும். வேட்பாளருக்கு வெறுமனே கும்பிடு மட்டும் தான் போடுவார்கள் என நினைத்தேன்.

ஆனால், கூட்டணி தலைவர்கள் இணைந்து கையை உயர்த்தியது வெற்றியை உறுதி அளித்தது. குழுக்கள் வீடு வீடாக சந்திப்பது தான் வெற்றியை தரும், வாக்குகளை சேகரிக்க வேண்டும்

மக்களை தினந்தோறும் சந்தித்து 5 நிமிடங்கள் பார்த்தால் தான் வெற்றியை கொடுக்கும்

செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்தார், இன்றும் அவர் கோவையை பற்றி நினைத்து வருவார்,

திமுக உட்பட கூட்டணி தொண்டர்கள் மீறி எதையும் செய்ய முடியாது என என்னால் நிச்சயமாக உணர்ந்து உள்ளோம்.



பொள்ளாச்சியில் முதல்வரின் கருத்துக்கு எதிர்த்தரப்பினருக்கு பயம் வந்தது. பயம் இருப்பதால் தான் நம் ஊரையே சுற்றி சுற்றி வருகின்றனர். எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், நாம் தான் 40 லும் வெற்றி பெறுவோம்

வீடு வீடாக தாய்மார்களை சந்திக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது, அந்த வாக்கு நமக்கு கிடைக்காது என்றால் 5 முறையாவது மீண்டும் மீண்டும் சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உருவாக்க வேண்டும்.

12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வருகிற 12ஆம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது.

சிறு சிறு வேலைகளை எங்கேயோ நடப்பதை நியாபகம் வைத்து செயல்படுத்தும் முதல்வர் இதுவரை இல்லை. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வேலையையும் பார்த்து வருகிறார்

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத்தில் நாம் தவற விட்டிருக்கலாம். ஆனால், முதல் நிகழ்ச்சி என்பது வாக்களிக்காதவர்கள் என யார் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் உழைக்க நினைக்கிறேன் என முதல் கூட்டத்தை கோவையில் நடத்தினார்.

திமுக வெற்றி பெற்றதால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும்

எல்லாரும் கோவை மண்டலம் என சொல்கிறார்கள், ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் திமுகவிற்கு முதல் வெற்றி கோவையிலிருந்து வர முடியும் என்று தெரிவித்தார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...