திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை

திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மதுரை மாவட்டம் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பறக்கும் படை C பிரிவு வாகனம் அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா தலைமையில், உதவி ஆய்வாளர் பழனியம்மாள், தலைமை காவலர் துரைபாபு, காவலர்கள் ஐதீஷ், பொன்ரகுராஜன் ஆகியோர் கொண்ட குழு சோதனைக்காக திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் இருக்கும் கிருஷ்ணா பேக்கரி அருகே அதிகாலை முதல் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இங்கு தனியார் சொகுசு பேருந்துகள் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் இடமான அந்த பகுதியில், சென்னையில் இருந்து கோவை வந்த A1 Travels சொகுசு பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டும், செல்போன் உபயோகித்துக் கொண்டும் இருப்பதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொடனர். மேலும் அவரது பைகளை சோதனை செய்ததில் கருப்பு கலர் கேரிபேக் பையில் பணத்தை கட்டி தனது பேக்கில் வைத்திருப்பது தெரியவந்தது.



இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மதுரை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (27) என்பதும், அவரது பையில், உரிய ஆவணங்கள் இன்றி 500 ரூபாய் பண்டல் 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது.

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ் (25) என்ற இளைஞர் ரஹ்மத்துல்லாஹ்வை அழைத்துச் செல்ல ஸ்கூட்டரில் வந்துள்ளார்.அவரும் பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லவே, உடனடியாக பறக்கும் படையினர் 14.94 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...