சிங்காநல்லூரில் இரயில்வே கேட்டினை சேதப்படுத்திய லாரி ஓட்டுநர் கைது

இரயில்வே கேட்டினை சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநர் விஷ்ணுவர்தனை இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: கடந்த 11.03.2024 அன்று இருகூர் மற்றும் பீளமெடு இரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்காநல்லூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு உள்ள இரயில்வே கேட்டினை கடந்து செல்லும் போது ஒரு லாரியானது இரயில்வே கேட்டின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது. மேலும் வண்டியின் ஓட்டுநர் அந்த இடத்தில் நிற்காமல் தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சவுரவ் குமார், சேலம் கோட்ட ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை ( RPF ) மற்றும் ரதீஷ் பாபு, உதவி ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை, கோவை ஆகியோர்களின் உத்தரவின் பேரில் கிரீஸ், ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மேற்பார்வையில், பாலையா உதவி ஆய்வாளர், RPF, கோயம்புத்தூர் மற்றும் ராஜா காவலர், RPF, கோயம்புத்தூர் குழுவாக நியமிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குற்றவாளியை தேடும் பணி நடைபெற்று வந்தது.

பின்னர் சம்பவ இடத்திலிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தும், நேரடி சாட்சிகளை விசாரித்தும் விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வண்டியை அடையாளம் காண முயற்சி செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 18.03.2024 சேலம் வாழப்பாடியை சேர்ந்த விஷ்ணுவர்தன் வயது 22 என்ற ஓட்டுநரை கைது செய்தும், வண்டியை பறிமுதல் செய்தும் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...