சிறுமுகை அருகே காந்தையூரில் வாழை தோப்புக்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை பத்திரமாக மீட்பு

தமிழ்ச்செல்வன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள ராட்சத முதலையை பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


கோவை: தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 100 அடியில் 63 அடியாக சரிந்துள்ளது.

மேலும், பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால் பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. இதனிடையே சிறுமுகை அருகே உள்ள காந்தையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று (மார்ச்.12) காலை வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, வாழை மரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று தென்பட்டுள்ளது. உற்றுப் பார்க்கையில் அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 12 அடி நீளமுள்ள இந்த ராட்சத முதலையை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் பத்திரமாக மீட்டு பவானிசாகர் அணைப்பகுதியில் விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...